ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரோஜா கொடுத்த சர்ப்ரைஸ்!

வெள்ளி, 13 டிசம்பர் 2019 (19:06 IST)
பெண்களுக்கு எதிரான குற்றச்செயலுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோடி ரெட்டி கொண்டுவந்துள்ள சட்டத்தை பெண்கள் வரவேற்றுள்ளனர். 
 
பாலியல் குற்றச்சாட்டுக்க்கு உள்ளானவர்கள் மீதான வழக்குகள் ஒரு வாரத்திற்குள் விசாரிகப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுபவர்களுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை வழங்க புதிய மசோதா வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   
 
இதனையடுத்து மசோதா ஆந்திர சட்டபேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு அடுத்து நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளில் ஆந்திர அரசு இறங்கியுள்ளது. இந்த மசோதவை வெற்றிபெற செய்ததன் மூலம் பாலியல் வழக்குகளுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா பெறுகிறது. 
 
ஆந்திரப் பிரதேச திஷா சட்டம் (AP Disha Act) என இந்த சட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக பெண் எம்.எல்.ஏ.க்களான ரோஜா உள்பட அனைவரும் முதல்வர் அலுவலகத்தில் ஜெகனை சந்தித்தனர். அங்கு அவருக்கு, குங்குமம் இட்டுவிட்டு, இனிப்பு ஊட்டிய பெண் எம்.எல்.ஏ.க்கள், பின்னர் ராக்கி கயிறு கட்டினர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்