ரயில் முன் பாய்ந்து காணாமல் போன பெண் - அதிர்ச்சி வீடியோ
வியாழன், 6 ஜூலை 2017 (12:29 IST)
மும்பையில் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
\
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள காட்கோபர் ரயில் நிலையத்தில் கடந்த 4ம் தேதி ஒரு வியத்தகு சம்பவம் நடந்தது. அதாவது, ரயிலுக்காக பயணிகள் அனைவரும் நடைமேடையில் காத்திருந்தனர்.
அப்போது ஒரு மின்சார ரயில் அங்கு வந்தது. அப்போது திடீரெனெ அங்கு நின்றிருந்த ஒரு பெண் ரயிலின் முன்பு உள்ள தண்டவாளத்தில் குதித்தார். இதைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர் நிச்சயம் இறந்திருக்கக் கூடும் என கருதிய அவர்கள், ரயில் செல்லும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். ரயில்வே போலீசாரும் அங்கு விரைந்தனர்.
ஆனால், ரயில் சென்றதும் தண்டவாளத்தில் அந்த பெண்ணின் உடல் இல்லை. இது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. ஒருவேளை ரயில் சக்கரத்தில் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் என பார்த்தாலும், தண்டவாளத்தில் எந்த ரத்தக்கறையும் இல்லை.
இதையடுத்து, அனைத்து நடைமேடையில் இருந்த கேமராக்களையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ரயில் முன்பு பாய்ந்த அந்த பெண், கண் இமைக்கும் நேரத்தில் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி அடுத்த நடைமேடைக்கு ஏறி வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியுள்து.
ஆனால் அவர் யார்? அவர் உண்மையில் தற்கொலைக்குதான் முயன்றாரா? எப்படி தப்பினார் என்ற விசாரணையில் ரயில்வே போலீசார் இறங்கியுள்ளனர்.