ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடிய மூதாட்டி... வைரலாகும் வீடியோ

புதன், 15 ஜனவரி 2020 (14:06 IST)
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தொழிலாளர்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடினார். அதில், ஒரு மூதாட்டி ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வைரல் ஆகிவருகிறது.
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையில், துப்புரவு பணிப் பண்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடினர்.
 
இந்த விழாவில் 1500 பெண் பணியாளர்கள் பங்கேற்றனர். அப்போது, பணியாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பித்தார். அதில், ரவுடி பேபி என்ற பாடலுக்கு ஒரு மூதாட்டி நடனம் ஆடியது எல்லோரையும் கவர்ந்தது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

See a video of the same. pic.twitter.com/4OXTycFT4d

— Kiran Bedi (@thekiranbedi) January 14, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்