காவல் நிலையத்தில் குஜால்: புகார் கொடுக்க வந்த பெண்ணை மசாஜ் செய்ய வைத்த சப் இன்ஸ்பெக்டர்

சனி, 18 ஜூன் 2016 (13:03 IST)
உத்தரப்பிரேதேசம் மாநிலம் ஹர்தாய் மாவட்டத்தில் கொத்வாலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணை சப் இன்ஸ்பெக்டர் மசாஜ் செய்து விடுமாறு வற்புறுத்தி மசாஜ் செய்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
மூலிகை தைலங்கள் விற்பனை செய்யும் பெண் ஒருவர் அவரது கணவருடன் கவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்க வந்துள்ளார். அப்போது அவர் வைத்திருந்த மூலிகை தைலங்களை பற்றி விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை தனக்கு மூலிகை தைலத்தால் மசாஜ் செய்து விடுமாறு கூறியுள்ளார்.
 
சப் இன்ஸ்பெக்டர் கூறியதால் அதை மறுக்க முடியாமல் அந்த பெண்ணும் காவல் நிலையத்திலேயே அவருக்கு மசாஜ் செய்துள்ளார். இந்த காட்சியை யாரோ புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். இது ஹர்தாய் மாவட்டம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சப் இன்ஸ்பெக்டர் அரைகுறை ஆடையுடன் பெண்ணிடம் மசாஜ் செய்யும் காட்சியில் அந்த பெண்ணின் கணவரும் அவர் அருகில் உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. காவல் நிலையத்தில் பெண்களை கொடுமை படுத்துவதா என கண்டனங்கள் தெரிவித்தனர்.
 
சப் இன்ஸ்பெக்டரின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டன. அவரை பணி நீக்கம் செய்யவும் கோரிக்கை எழுந்து வருகின்றன. மேலும் இதே சப் இன்ஸ்பெக்டர் தான் சமீபத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் புகார் கொடுக்க வந்தபோது அவரை தனது ஷூவுக்கு பாலிஷ் போடுமாறு வற்புறுத்தியவர் என்பது தெரியவந்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்