எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா மத்திய பட்ஜெட்.! பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை..!

Senthil Velan

வியாழன், 11 ஜூலை 2024 (15:57 IST)
2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். 
 
18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மத்தியில் மீண்டும் 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.
 
இந்நிலையில், 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  ஜூலை 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் இடம் பெற உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார வல்லுநர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். 

ALSO READ: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.! கைதான 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்.!!

நிர்மலா சீதாராமன் ஏழாவது முறையாக தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்