பிக் பஜாரில் கொடுக்கும் பணத்தை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தர கூடாதா? - இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்

வெள்ளி, 25 நவம்பர் 2016 (15:07 IST)
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியின் திட்டத்தில் பல உள்நோக்கங்கள் இருக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம். 


 
 
இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழகப் பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
 
“ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையால், சாதாரண மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல். பணத்தை மாற்றுவதற்காக வந்தவர்களில் இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களை போலவே வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  258 பிக் பஜார்களில் ரூ.2,000 வரை நோட்டுகள் சப்ளை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த பணம் எங்கிருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி அவர்களுக்கு ‘லைசென்ஸ்’ கொடுத்து விட்டார்களா? இதே அறிவிப்பை எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல்., ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் செய்யலாமே? இது எந்த உள்நோக்கத்துக்காக செய்யப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்