உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட சோதனையில் கோவிஷீல்டு பயன்படுத்தப்படும் நாடுகளில் இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கோவிஷீல்டு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து இரு நாட்டு அரசுகளுக்கும் எச்சரிக்கை செய்துள்ள உலக சுகாதார அமைப்பு, உடனடியாக இதுகுறித்து நடவடிக்கைகள் மேற்கொண்டு போலி தடுப்பூசி பயன்பாட்டை தடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.