இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு முடிவுகள் குளறுபடிகள் சார்ந்து ஏராளமான மாணவர்களால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலைத் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத தயாராக இருந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை இன்று அறிவித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.