பி.எஸ்.என்.எல் பயனாளிகளுக்கு 4ஜி எப்போது? அதிரடி அறிவிப்பு..!

Mahendran

வெள்ளி, 5 ஜூலை 2024 (15:36 IST)
ஜியோ, ஏர்டெல் ஆகிய தனியா தொலைதொடர்பு நிறுவனங்கள் 5 ஜி இன்டர்நெட் வேகத்தை பயனாளிகளுக்கு கொடுத்து வரும் நிலையில் தற்போது தான் 4ஜி குறித்த அறிவிப்பை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது.
 
மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனம் அடுத்த மாதம் முதல் 4ஜி சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக பத்தாயிரம் மொபைல் டவர்களை மேம்படுத்தி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோ மூலம் புதிய 4ஜி ரீசார்ஜ் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பிரிபெய்டு திட்டங்கள் பயனாளர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால்கள் 4ஜி இன்டர்நெட் உள்பட பல்வேறு வசதிகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
பி.எஸ்.என்.எல் 4ஜி  திட்டங்களை அறிவித்துள்ளதால் ஜியோ ஏர்டெல் ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்களுடன் போட்டிக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்