மைக்ரோ இர்ரிகேஷன் என்ற ஆங்கில சொல்லை அமித்ஷா பயன்படுத்திய நிலையில் அதை உண்மையில் சொட்டுநீர்ப்பாசனம் என்று எச்.ராஜா மொழி பெயர்த்திருக்க வேண்டும். ஆனால் எச்.ராஜா, 'சிறுநீர் பாசனம்' என்று மொழி பெயர்த்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார் எச்.ராஜா.
அதில் வித்தவுட் கமெண்ட் என்று போட்டு மைக்ரோ என்பதற்கான அர்த்தம் சிறிய, நுண்ணிய, நுண் என்று பொருள் போட்டிருந்தார்.
நாம் தேடி பார்த்த வரையில் மைக்ரோ என்பதற்கு அர்த்தம் நுண், சிறிய என்றுதான் வருகிறது. எந்த இடத்திலும் சிறுநீர் என்று இல்லை. ராஜா எந்த டிக்ஸ்னரியை பார்த்து இப்படி பதிவிட்டார் என்பது தெரியவில்லை என பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.