இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மமதா பானர்ஜி தான் உயர்த்திய அகவிலைப்படியில் திருப்தி இல்லை எனில் தனது தலையை வெட்டி எடுத்துக் கொள்ளும்படி அவர் தெரிவித்துள்ளார். தற்போது மூன்று சதவீதம் அகவிலைப்படை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து மேற்குவங்க அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு நிகராக அகவிலைப்படியை உயர்த்த சாத்தியமில்லை என்றும் அதற்கு மாநில அரசிடம் நிதியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது