ஃபேஸ்புக் லைவ்வில் தற்கொலை செய்த புற்றுநோயாளி

செவ்வாய், 3 ஜூலை 2018 (09:28 IST)
கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் லைவ்வில் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பாம்பை கடிக்க வைத்து யூடியூப் லைவ்வில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த புற்றுநோயாளி ஒருவர் நோயின் கொடூரம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இவர் தனது தற்கொலையை ஃபேஸ்புக் லைவ்வில் ஒளிபரப்பு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அரிந்தம் தத்தா என்பவர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இண்டர்நெட் மையம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென ரத்தபுற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மனைவியையும் விவாகரத்து செய்துவிட்டதால் தனக்கு ஆறுதல் கூட யாரும் இல்லை என்ற கவலை அவரை வாட்டியுள்ளது. இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார். தன்னுடைய மரணம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதால் அவர்  தனது தற்கொலையை ஃபேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த ஃபேஸ்புக் பயனாளிகல் பலர் அவரிடம் தற்கொலை முடிவை கைவிடுமாறு அறிவுரை கூறினர். ஒருசிலர் அவருடைய நண்பர்களுக்கு போன் செய்து உடனடியாக அவரை காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அரிந்தம் தத்தா அதற்குள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை லைவ்வில் பார்த்த ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்தனர்,.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்