வெப்துனியா கடந்து வந்த பாதை: 20 வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் ரீவைண்ட்!!

திங்கள், 23 செப்டம்பர் 2019 (11:50 IST)
வெப்துனியா இன்றி தனது 20வது ஆண்டு கால வெற்றி பயணத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. 
வெப்துனியாவின் தோற்றம்:
 
இந்தியாவில் கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி, நமது வெப்துனியா எனும் ஆன்லைன் மீடியா துவக்கப்பட்டது. முதன் முதலில் இந்தி மொழியில் துவங்கப்பட்ட நமது வெப்துனியாதான் இந்தியாவில் முதன் முறையாகத் துவக்கபட்ட இணையதள போர்டெல் ஆகும்.
 
வெப்துனியா இந்தியாவில் இணைதள போர்டெலின் முன்னோடி:
 
சிறிய அளவில் தொடங்கபட்ட நம் வெப்துனியா இன்று, பரந்து விரிந்து இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், ஒரிசா, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் கிளை பரப்பி இன்று ஆலம் விழுதுபோல் செழித்து வளர்ந்துள்ளது. 
 
பல்வேறு இணைய போர்டல்களின் போட்டிகளுக்கு மத்தியில் கம்பீரமாக இன்று தனது 20 வது ஆண்டில் நுழைகிறது நம் வெப்துனியா. இதற்கு ஆரதவளித்த எம் வாடிக்கையாளர்கள், வாசிப்பாளர்கள், பயனாளர்கள், ஃபாலோயர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த பொன்னான நாளில் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்.
 
நாம் கடந்து வந்த பாதை ஒரு மீள்பார்வை:
 
இந்தியாவில் இந்த இணையதளப் போர்டெல் அறிமுகமான ஆண்டு 1980 என்றாலும், இந்தியப் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்.என்.எல் 1995 ஆம் ஆண்டு தனது இணைய சேவையை அறிமுகப்படுத்திய போதுதான் இணையதளப் பயன்பாடு நாட்டில் கணிசமாகத் தொடங்கியது. ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் ஆங்கில மொழியின் ஆதிக்கமே இணையதளங்களில் ஆளுமை செலுத்தி வந்தது.
 
நம் இந்திய மொழிகளில் எப்படி வெற்றி சாத்தியமானது:
 
கடந்த 1999 ஆம் ஆண்டில் நம் வெப்துனியா இணையதள போர்டெலில் அடியெடுத்து வைத்த போது, அதுவரை இணையதளத்தில் ஆளுமை செலுத்தி வந்த ஆங்கிலத்தை தகர்த்து,  இந்தி மொழிப் பயன்பாட்டை வெகுவாக அதிகரிக்கச் செய்தது நம் வெப்துனியாவின் ஆகப்பெரும் சாதனையாகும். 
 
அதனையடுத்து, பன்முகத்தன்மை மற்றும் பன்முகக் கலாச்சாரம் கொண்ட நம் இந்தியாவில் உள்ள 8 மொழிகளில் தடம் பதித்துக் கடந்த 19 வருடங்களாக வெற்றி முகமாக இத்துறையில் இயங்கி வருகிறோம். தனித்தன்மையுள்ள நம் வெப்துனியாவுக்கு, அன்று முதல் இன்று வரை பேராதரவு தந்து கொண்டிருக்கும் வாசகப்பெருமக்கள் மற்றும் பயனாளர்களுக்கு இதயம் மலர்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
பெருமைகுரிய நம் வெப்துனியா நிறுவனர்கள்:
 
இன்று, இந்தியாவில் உள்ள பிரபலமான 8 மொழிகளில் மக்களின் நன்னம்பிக்கையப் பெற்றுத்திகழும் நம் வெப்துனியாவை நிறுவி, அதை மக்களின் அன்றாட நடைமுறை வாழ்வில் ஒரு அங்கமாக கொண்டுவந்தவர் சி.இ.ஒ. அருமைத்திரு. வினய் சஜிலானி ஆவார்.
 
வெப்துனியா ஊழியர்கள்:
 
அவரது முயற்சியில் பல்வேறு இயக்குநர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பில் இன்று இந்தியாவில் தலைசிறந்த இணையதளப் போர்டெலாக இருந்துவருகிறது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.
 
பயனாளர்களின் ஏகோபித்த ஆதரவு:
 
இனிமேலும் நம் வெப்துனியா வெற்றிப்பாதையில் வலம் வர, வாடிக்கையாளர்களின் நல்லாதரவும், விமர்சனங்களும் தந்து, எங்களை மென்மேலும் ஊக்கப்படுத்த வேண்டுமென பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்