கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே 14 வயது சிறுவன் ஒருவன், டேட்டிங் செயலி மூலம் அறிமுகமானவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவன், தனது தாயின் கைபேசியை பயன்படுத்தி டேட்டிங் செயலியில் ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். அதன் பிறகு, அந்த நபர் சிறுவனின் வீட்டிற்கு வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் தொடர்ச்சியாக மொத்தம் 14 பேர் மாறி மாறி வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதையறிந்த சிறுவனின் தாயார் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஏழு பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் செயலிகளின் பாதுகாப்புக் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.