உத்தரப் பிரதேசம் மாநிலம் முஸாபர் நகரில் உள்ள கஸ்தூரிபா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் 70 மாணவிகளின் உடைகளை களைய சொல்லி அவர்களை நிர்வாணப்படுத்தி அவர்களது பெண்ணுறுப்பை சோதனை செய்துள்ளார் அந்த விடுதியின் வார்டனும், தாளாளருமான பெண் சுரேகா தோமர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் மூலம் புகார் அளிக்கப்பட்டு அதில், மாணவிகள், தங்களது உடைகளை மனிதாபிமானமற்ற முறையில் விடுதியில் அகற்றினார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர். அந்த விடுதி காப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.
பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் குறித்து விவாதிக்க கூச்சப்படும் இந்த நாட்டில் மாணவிகளிடம் இந்த விவகாரத்தில் கொடூரமாக நடந்து கொண்ட பெண் விடுதி காப்பாளர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிராக பெண்கள் செய்தாலும் அது பாலியல் துண்புறுத்தல் தான் என சமூக ஆர்வலர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.