சட்டமன்ற தேர்தல்: 1 மணி நிலவர வாக்குபதிவு விவரம்!

திங்கள், 14 பிப்ரவரி 2022 (14:22 IST)
கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 44.63 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
 
உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் 55 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.
 
உத்தராகண்டில் உள்ள 70 தொகுதிகளும், கோவாவில் உள்ள 40 தொகுதிகளும் இன்று தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்த மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 44.63 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
 
உத்திரப்பிரதேச சட்டமன்ற 2 ஆம் தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 39.07 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரேகட்டமாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 35.21 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்