நெல்லையில் புதிய பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் தங்கும் மாளிகை உள்பட விஸ்டா என்ற கட்டிடம் கட்ட திட்டமிட்டுள்ள அந்த கட்டிடத்தை நிறுத்த கோரி தாக்கல் செய்த மனு மீது டெல்லி ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் 86 ஏக்கரில் விஸ்டா கட்டும் பணி தொடங்கியது நாடாளுமன்றம், மத்திய அரசு அலுவலங்கள், பிரதமர் அலுவலகம், சிறப்பு பாதுகாப்பு படை அலுவலகம், குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இந்த விஸ்டாவில் அடங்கியுள்ளன
இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை உச்சக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்து இந்த கட்டடம் கட்ட வேண்டுமா என்று என்றும் இந்த கட்டடத்தை நிறுத்த வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.