கண்ணீர் புகை குண்டு, தடியடி, கல் வீச்சு: மீண்டும் போராட்ட களமான டெல்லி!

செவ்வாய், 17 டிசம்பர் 2019 (16:10 IST)
டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. 
 
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதாலும், கற்களை வீசியதாலும் வன்முறை வெடித்தது. மாணவர்கள் மேல் போலீஸார் தடியடி தாக்குதல் நடத்தினர்.
 
மேலும் அனுமதியின்றி பல்கலைகழகத்துக்குள் போலீஸார் நுழைந்து மாணவர்களை தாக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜாமியா மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது டெல்லியில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. டெல்லியில் சீலம்பூர் பகுதியில் போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே மோதல். போராட்டகாரர்கள் போலீஸ் மீது கற்களை வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்டதாக கூறி போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். அதோடு கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். 
 
பதற்றமான சூழல் காரணமாக டெல்லி சீலம்பூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அதோடு, சீலாம்பூர் - ஜாபர்பாத் இடையேயான 66 அடி சாலை மூடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்