திறந்த வெளியில் மலம் கழித்த கிராம மக்கள் கைது

செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (15:36 IST)
ராஜஸ்தான் மாநிலம் காங்கிதாலா கிராமத்தில் திறந்த வெளியில் மலம் கழித்த கிராம மக்களை அமைத்திக்கு குந்தகம் விளைவித்ததாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
ராஜஸ்தான் மாநிலம் காங்கிதாலா கிரமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டாத வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த கிராமத்தில் 19% மக்கள் மட்டுமே அவர்களது வீடுகளில் கழிப்பறை கட்டியுள்ளனர். 
 
இந்நிலையில் கடந்த ஞாயிறு கிழமை திறந்த வெளியில் மலம் கழித்ததாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் அமைத்திக்கு குந்தகம் விளைவித்ததாக கைது செய்யப்பட்டு அன்று மாலை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்