வாகன காப்பீடு தொகை அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

திங்கள், 7 மார்ச் 2022 (07:45 IST)
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு தொகையை மத்திய அரசு திடீரென அதிகரித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் வாகன காப்பீடு இன்சூரன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உயர்த்தப்பட்ட தொகை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு தொகை உயர்வு குறித்த முழு விவரம் இதோ:
 
ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட்ட வாகன காப்பீடு தொகை முழு விவரங்கள்:
 
இருசக்கர வாகனங்கள்:
 
150-350 சிசி வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ.1366
350 சிசிக்கும் மேல் வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ.2804
 
கார்கள்
 
1000 சிசி வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 2094
1000-1500 சிசி வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 3416
1500 சிசிக்கும் மேல் வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 7879
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்