தொடரும் மோதல் சம்பவம்; மீண்டும் மாடு மீது மோதிய வந்தே பாரத் ரயில்!

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (08:44 IST)
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் பல வழித்தடங்களில் செயல்பட்டு வரும் நிலையில் காந்திநகர் – மும்பை இடையே சென்ற வந்தே பார்த் ரயில் மாடு மீது மோதி சேதமடைந்துள்ளது.

இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட அதிவேக விரைவு ரயில்களான வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வந்தே பாரத் ரயில்கள் தண்டவாளத்தை கடக்கும் மாடுகள் மீது மோதி சேதமடையும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

நேற்று மாலை குஜராத்தின் காந்திநகரில் இருந்து மும்பை சென்ற வந்தே பாரத் அதிவிரைவு ரயில் குஜராத்தின் உத்வாடா அருகே சென்று கொண்டிருந்தபோது லெவல் கிராசிங்கில் சென்ற மாடு மீது மோதியது. இதனால் ரயிலின் முன்பக்க பக்கவாட்டில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் புறப்பட்டது. வந்தே பாரத் ரயில்களில் கால்நடைகள் மோதுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்