சிவசேனா எம்பிக்களும் ஷிண்டே அணிக்கு தாவுகிறார்களா? மகாராஷ்டிராவில் பரபரப்பு
புதன், 20 ஜூலை 2022 (09:14 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருந்த போது திடீரென சில எம்எல்ஏக்கள் ஷிண்டே அணிக்கு சென்றதால் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது
தற்போது ஷிண்டே முதல்வராக இருந்து வரும் நிலையில் சிவசேனா கட்சியின் எம்பிக்களும் ஷிண்டே அணிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது
சிவசேனா கட்சியின் 12 எம்பிக்கள் ஒரு குழு அமைத்து அந்த குழுவாக ஷிண்டே அணிக்கு இருப்பதாக கூறப்படுகிறது
தனி ஒரு எம்பியாக இன்னொரு கட்சி தாவினால் தான் கட்சி தாவல் சட்டம் பாதிக்கும் என்றும் ஆனால் ஒரு குழுவாக தாவினால் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது
எனவே தான் 12 எம்பிக்கள் ஒரு குழுவாக அமைத்து ஷிண்டே அணிக்க்கு செல்ல இருப்பதாக கூறப்படுவதால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது