லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர்சி புக்கை ஹெல்மெட்டில் ஒட்டி வைத்த பைக் மனிதர்

புதன், 11 செப்டம்பர் 2019 (06:15 IST)
மத்திய அரசின் புதிய வாகன போக்குவரத்து சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து வாகன ஓட்டிகள் ஒருவித பயத்துடனே வாகனங்களை இயக்கி வருகின்றனர். லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர்.சிபுக், போதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரத்துடன் வாகனம் இயக்குதல், போன்ற சட்டமீறல்களுக்கு ஆயிரக்கணக்கில் அபராதங்கள் விதிக்கப்படுகிறது.
 
 
முன்பெல்லாம் போக்குவரத்து போலீசாருக்கு ரூ.100, ரூ200ஐ வெட்டிவிட்டு சென்றுவந்த வாகன ஓட்டிகள் தற்போது ரூ.5000, ரூ.10000 என அபராதம் விதிக்கப்படுவதை பார்த்து அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் சென்னை ஐகோர்ட் பலமுறை எச்சரித்தும் பலர் ஹெல்மெட் போடாமல் வாகனங்களை இயக்கி வந்த நிலையில் இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தவுடன் 99.99% இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டுடன் தான் வண்டி ஓட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் தற்போது பொறுப்பாக ஹெல்மெட் போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த வடோரா என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் தனது லைசென்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் முதலியவற்றை தனது ஹெல்மெட்டிலேயே ஒட்டி வைத்துள்ளார். போலீசார் இவையெல்லாம் கேட்கும்போது ஹெல்மெட்டை ஒவ்வொரு பக்கமும் திரும்பி ‘இது இன்சூரன்ஸ்’, இது லைசென்ஸ்’ என்று காண்பிக்கின்றார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்