ரமணாவும் திருட்டுக்கதையா? அப்ப முருகதாசுக்கு எதுதான் ஒரிஜினல் கதை?

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (08:40 IST)
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றானதாக கருதப்படும் ‘ரமணா’ திரைப்படமும் தன்னுடைய கதை என ஒரு இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’, ‘கத்தி’, ‘சர்கார்’ ஆகிய திரைப்படங்களின் கதை தன்னுடையது என ஒருசிலர் உரிமை கொண்டாடினர். குறிப்பாக ‘சர்கார்’ படத்தின் கதை குறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, முருகதாஸ், கதைக்கு உரிமை கொண்டாடியவரின் பெயரை அந்த படத்தின் டைட்டிலில் இணைக்க ஒப்புக்கொண்டார்.
 
 
இந்த நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என இயக்குனர் நந்தகுமார் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்துள்ளார். தன்னுடைய ‘ஆசான்’ என்ற கதைதான் ‘ரமணா’ என்றும், இதுகுறித்து தான் விஜயகாந்திடம் முறையிட்டபோது தனக்கு ஒரு பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை அமைதிப்படுத்திவிட்டார் என்றும், அதன்பின் தான் விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ திரைப்படத்தை தான் இயக்கியதாகவும் நந்தகுமார் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
 
இன்னும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா, ஏழாம் அறிவு, போன்ற படங்களை யார் தன்னுடைய கதை என்று சொல்ல வருவார்களோ? என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்