முதல் டோஸ் கோவிஷீல்டு, 2வது டோஸ் கோவாக்ஸின்: உபியில் நடந்த குளறுபடி!

புதன், 26 மே 2021 (21:18 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் டோஸ் கோவிஷீல்டு, மற்றும் இரண்டாவது டோஸ் கோவாக்ஸின் என ஒரே நபருக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக ஏற்பட்டிருக்கும் குளறுபடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா பாதிப்பு காரணமாக தடுப்பூசிகள் தற்போது நாடு முழுவதும் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொருத்தவரை கோவாக்ஸின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் போட வேண்டும் என்பதும் முதல் டோஸ் எந்த நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டதோ அதே நிறுவனத்தின் தடுப்பூசி தான் இரண்டாவது டோஸ் போடப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நபருக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு, மற்றும் இரண்டாவது டோஸ் கோவாக்ஸின், செலுத்தப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்த நபருக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இதேபோல் மொத்தம் 20 பேருக்கு மாறி மாறி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்