ஓமன் நோக்கி செல்கிறது வாயு புயல்: குஜராத் தப்பியதா?

வியாழன், 13 ஜூன் 2019 (22:33 IST)
அரபிக்கடலில் தோன்றிய வாயு புயல் குஜராத் மாநிலத்தில் கரை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திசை திரும்பி தற்போது ஓமன் நோக்கி அதிதிவீர புயலாக சென்று கொண்டிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 
 
எனவே குஜராத் மாநிலம் புயலின் கோரப்பிடியில் இருந்து தப்பியது. இருப்பினும் குஜராத் மாநிலத்தின் கடலோர பகுதிகளில் கனமழை இருக்கும் என்பதால் அந்த பகுதியில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். போர்பந்தர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் திடீரென ஓமனை நோக்கி வாயு புயல் திரும்பியுள்ளதால் ஓமன் நாட்டின் அரசு புயலை எதிர்கொள்ள அவசர நடவடிக்கை எடுத்து வருகிறது. புயல் கரையை கடக்க இன்னும் சில மணி நேரங்களே இருப்பதால் ஓமன் அரசு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்