சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் திடீர் பின்னடைவு..! என்ன காரணம்?

வெள்ளி, 24 நவம்பர் 2023 (07:50 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணியில் திடீரென பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுரங்கப்பாதையை துளை செய்யும் இயந்திரத்தை தாங்கி நிற்கும் அடித்தளம் திடீரென சேதமடைந்தது. இதன் காரணத்தால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை 46.8 மீட்டர் வரை சுரங்கப்பாதை துளையிடப்பட்டுள்ளதாக, சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை நெருங்கி விட்டதாகவும் மீட்பு குழுவினர்   தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மீட்பு பணி தாமதம் ஆவதால் சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று இரவுக்குள் மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்