கேதார்நாத் கோயிலில் 200 கிலோ தங்கம் திருட்டு.. உத்தவ் தாக்கரே அதிர்ச்சி தகவல்..!

Siva

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (16:18 IST)
கேதார்நாத் கோவிலில் 200 கிலோ தங்கம் திருடப்பட்டு உள்ளதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வக்பு வாரியத்தின் சொத்தாக இருந்தாலும் சரி, கோயில்களின் சொத்தாக இருந்தாலும் சரி அவற்றை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறிய உத்தவ் தாக்கரே, கேதார்நாத் கோவிலில் 200 கிலோ தங்கம் திருடப்பட்டதாக சங்கத் சங்கராச்சாரியார் கூறியது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கேதார்நாத் கோயில் கருவறை சுவர்களில் 200 கிலோ தங்கத் தகடு பொருத்தப்பட்டிருந்ததாகவும், அந்த தங்கத் தகடுகள் காணாமல் போனதாக எழுந்துள்ள புகார் குறித்து ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை? என்றும் உத்தராகண்டில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கேள்வி எழுப்பினார்.

ஆனால் இந்தப் புகாரை மறுத்த கோவில் நிர்வாக குழு, இது திட்டமிட்ட சதி என்றும், அடிப்படை இல்லாத புகார் என்று கூறியிருந்தது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்