உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள இந்து கோவில் ஒன்றில் முஸ்லீம் சிறுவன் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ”இந்து யுவா வாகினி” என்ற அமைப்பு இந்து கோவில்களில் இந்து அல்லாதவர்கள் நுழைய கூடாது என்று அறிவிக்கும் வகையில் பேனர்களை தயாரித்து நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கோவில்களில் இருந்த சர்ச்சைக்குரிய பேனர்கள் நீக்கப்பட்டதுடன், இதை செய்த இந்து யுவா வாகினி அமைப்பினர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.