உத்தரகாண்ட் பெருவெள்ளம்: இதுவரை 26 உடல்கள் மீட்பு!

திங்கள், 8 பிப்ரவரி 2021 (22:59 IST)
உத்தரகாண்ட் பெருவெள்ளம்: இதுவரை 26 உடல்கள் மீட்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டது என்பதும் இந்த பெரு வெள்ளம் காரணமாக அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 150க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்தது
 
இந்த நிலையில் தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து அனல்மின் நிலையத்தில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டது. இந்த விபத்தில் 150 பேருக்கு மேல் மரணமடைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் இரவு 8 மணி நிலவரப்படி 26 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் இந்த பெரு வெள்ளம் காரணமாக 177 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் போலீசார் கூறி வருகின்றனர்/ இரவு பகலாக மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் உயிரோடு யாராவது இருந்தால் அவர்களை காப்பாற்றும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்