மீண்டும் வரவுள்ள பப்ஜி கேம்....கூகுள் செயலியில் புதிய சாதனை

செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (19:07 IST)
பப்ஜி  விளையாட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் சுமார் 10மில்லியன் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

கடந்தாண்டு இந்திய – சீன எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியாதால் சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதனால் தகவல்கள் திருடப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் பப்ஜி விளையாட்டு இந்தியாவின் அதிகளவில் ரசிகர்கள் உள்ளதால் மீண்டும்  கொண்டு வர பப்ஜி நிறுவனம் முயற்சித்துவருகிறது.

இந்தியாவில் சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்களுக்கு அடுத்ததாக சிறுவர் முதல் இளைஞர்கள் வரை பலரையும் கவர்ந்துள்ள பப்ஜி லை விளையாட்டு.

இந்த பப்ஜி  விளையாட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் சுமார் 10மில்லியன் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் புதியவடிவமைப்பில் பப்ஜி கேமை அறிமுகம் செய்யவுள்ளதாக பப்ஜி நிறுவனம் அறிவித்தது.  இதையடுத்து கூகுள் பிளே ஸ்டோரில் இதற்கான முன்பதிவு தொடங்கியது. இதுவரை கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 10 மில்லியன் பேர் பப்ஜி நியூ ஸ்டேட் வீடியோ கேமுக்கு முன்பதிவ்ய் செய்து காத்திருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்