முஸ்லீம்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும்: போஸ்டர்களால் பரபரப்பு
வியாழன், 16 மார்ச் 2017 (17:20 IST)
ஊரை விட்டு முஸ்லீம்கள் உடனே வெளியேற வேண்டும் என உத்திரப்பிரதேசத்தில் போஸ்டர்கள் காணப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
நடத்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையுடன் வரலாறு காணாத வெற்றிப்பெற்றது. பாபர் மசூதி பிரச்சனையால் நடந்த மத கலவரம் இந்திய சரித்திரத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேர்லி என்ற மாவட்டத்தில் உள்ல ஜியானக்லா என்ற பகுதியில், முஸ்லீம்கள் ஊரை விட்டு உடனே வெளியேற வேண்டும் என போஸ்டர்கள் காணப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
மேலும் அந்த போஸ்டர்கள் அமெரிக்காவில் டிரம்ப் என்ன செய்ய விரும்புகிறாரோ அதையே நாங்கள் செய்ய விரும்புகிறோம் என்றும் முஸ்லீம்கள் இந்தாண்டு இறுதிக்குள் ஊரை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பயமுறுத்தும் விதமாக எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக போஸ்டர்களை அகற்றினர். மேலும் இந்துத்துவ அமைப்பில் தீவிரமாக செயலாற்றி வரும் 5 பேரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அப்பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதகலவரம் நிகழ்ந்து விடக்கூடாது என அக்கிராமத்தில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.