மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியக் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று தேர்தல் பிரச்சாரம் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
அவரது பேச்சின் போது ‘ ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய பின் நடக்கும் தேர்தல் என்பதால், இவ்விரு மாநிலத் தேர்தல்களும் அதிகமாகக் கவனிக்கப்படுகின்றன. இந்த தேர்தல்களில் மக்கள் தாமரை பட்டனை அழுத்துவது என்பது, பாஜக தலைவர்களுக்கு நன்மை செய்வது மட்டுமில்லாமல், பாகிஸ்தான் மீது தானாகவே அணுகுண்டு வீசுவதற்கு சமமாகும். இந்தியர்களின் தேசபக்தி இந்த தேர்தலில் தெரியும். பாஜகவின் ஒரு வாக்கைக் கூட அவர்களால் பிரிக்க முடியாது.’ எனத் தெரிவித்துள்ளார்.