உலகம் முழுவதும் கொரோனாவால் நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்துத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் விவசாயம் பல பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்து விவசாயத்திற்கு திரும்பலாம் என விவசாயிகள் பலர் காத்துள்ள நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலை ஐ.நா சபையின் உணவு மற்றும் வேளாண் பொருட்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி ஆப்பிரிக்காவிலிருந்து கூட்டமாக கிளம்பும் வெட்டுக்கிளிகள் ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் வழியாக கடந்து இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவை இந்தியாவிற்கு வரும் பட்சத்தில் விவசாய பயிர்களை அழித்து பெரும் நாசத்தை விளைவிப்பதுடன், பெரும் பஞ்சம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஐ.நா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.