கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போலிச்சாமியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவருடைய ஆணுறுப்பை கல்லூரி மாணவி ஒருவர் வெட்டியதாக வந்த செய்தியையும், அந்த பெண்ணை கேரள முதல்வரே பாராட்டியதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்'
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்குவங்க மாநிலம் அசன்சோல் பகுதியை சேர்ந்த முகம்மது நவுசத்திற்கும், பிகார் மாநிலம் லக்ஷ்மிசராய் பகுதியை சேர்ந்த ருக்பானு என்ற பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. ஆனால் ருக்பானு ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்ததால் கணவரை பிடிக்கவில்லை. மேலும் கணவருக்கு தெரியாமல் காதலனுடன் அவர் தொடர்பிலும் இருந்துள்ளார்.
இதுகுறித்து கணவர் முகம்மது நவுசத்திற்கு தெரிய வந்ததும் அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவர் முகம்மது தூங்கும்போது அவருடைய ஆணுறுப்பை பிளேடால் அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். வலியால் துடித்த முகம்மது தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் ருக்பானுவை தீவிரமாக தேடிவருகின்றனர்.