போர் எதிரொலி; இந்திய பங்குசந்தை வீழ்ச்சி! கச்சா எண்ணெய் உயர்வு!

வியாழன், 24 பிப்ரவரி 2022 (09:47 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியுள்ள நிலையில் இந்திய பங்குசந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளது.

ரஷ்யாவின் ஒடேசா உள்ளிட்ட நகரங்களுக்குள் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் போர் எதிரொலியாக இந்திய பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. போர் அறிவிப்பு வெளியானவுடன் சென்செக்ஸ் 1409 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 55,822 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதுபோல சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்து ஒரு பேரல் 100 டாலருக்கும் அதிகமாக விற்பனையாக தொடங்கியுள்ளது. இந்த போர் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்