பக்தர்கள் வீசிய வண்ணப் பொடியால் தீ விபத்து: உஜ்ஜைனி மகா காலேஸ்வரர் கோயில் பூசாரிகள் காயம்..!

Siva

செவ்வாய், 26 மார்ச் 2024 (08:40 IST)
நேற்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடிய நிலையில் கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில் உஜ்ஜைனி கோவிலில் பக்தர்கள் கோவில் கருவறைக்குள் கலர் பொடிகளை வீசிய நிலையில் கருவறையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் 14 பூசாரிகள் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜைனி உள்ள மகா காலேஸ்வரர் கோவிலில் நேற்று ஹோலி பண்டிகை நடைபெற்ற போது சுவாமிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்ட போது திடீரென சிலர் வண்ணக் பொடிகளை கருவறைக்குள் வீசினர். அப்போது வண்ண பொடிகளில் இருந்த ரசாயனம் ஆரத்தியில் உள்ள நெருப்புடன் கலந்ததை அடுத்து தீ விபத்து ஏற்பட்டது 
 
இந்த தீ விபத்தில் 14 பூசாரிகள் தீக்காயம் அடைந்ததாகவும் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது வந்துள்ள தகவலின் படி பூசாரிகளின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘உஜ்ஜைனி மகா காலேஸ்வரர் கோயிலில் நடந்த விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநிலஅரசின் மேற்பார்வையில் உள் ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளும் செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

ALSO READ: கெஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி கொடுத்தாரா காலிஸ்தான் தீவிரவாதி? எச் ராஜாவின் பதிவு
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்