மோடியை பார்த்ததும் மனசு மாறிய தாக்கரே! – கடுப்பான காங்கிரஸ்!

சனி, 22 பிப்ரவரி 2020 (11:07 IST)
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த உத்தவ் தாக்கரே மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட சிவசேனா, தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மற்றும் தே.காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. தற்போது சிஏஏவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கிய நிலையில் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களை போலவே சிஏஏவுக்கு எதிராக பேசினார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே. தொடர்ந்து பிரதமரின் திட்டங்களையும் விமர்சித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் செய்தி வெளியிட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று உத்தவ் தாக்கரேவும், அவரது மகன் ஆதித்ய தாக்கரேவும் பிரதமர் மோடியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர். உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற பிறகு பிரதமரை சந்திக்கும் முதல் சந்திப்பு இதுதான். இந்நிலையில் பிரதமரை சந்தித்து திரும்பிய உத்தவ் தாக்கரே என்பிஆர் மற்றும் என்.ஆர்.சியை மகராஷ்டிராவில் அமல்படுத்த போவதாக அறிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பு கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தவ் தாக்கரே – மோடி சந்திப்பில் பேசப்பட்டது குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனாலும் தாக்கரேவின் இந்த அறிவிப்பால் சிவசேனா கூட்டணியில் விரிசல் விழும் நிலை உருவாகியிருக்கிறது. பிரதமர் மோடியை சந்திக்கும் முன்னர் வரை எதிர்ப்பு தெரிவித்து வந்தவர் இப்போது ஒரேயடியாக பல்டி அடித்துவிட்டாரே என கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிகிறது.

ஆனால் தாக்கரே இப்படி செய்வது புதிதல்ல தேர்தலிலேயே இதைபோன்ற பல்டிகளை அடித்துதான் ஆட்சியை பிடித்துள்ளார் என கேஷுவலாக நகர்ந்து செல்கிறதாம் சிவசேனா வட்டாரங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்