கோவில் திறப்புக்கு பதிலாக கொரோனாவுக்கு போராடுங்கள்! – உத்தவ் தாக்கரே கறார் பதில்!
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (14:51 IST)
கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் கோவில்களை திறக்க முடியாது என உத்தவ் தாக்கரே கண்டிப்புடன் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மூன்றாவது அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களிலும் கோவில்கள் திறப்பது, விநாயகர் சதுர்த்தி போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் கோவில்களை திறக்க வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பாஜக உள்ளிட்ட கட்சியினர் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே “மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் குறையும் வரை கோவில்கள் திறக்கப்படாது. கோவில்களை திறக்க சொல்லி போராடுவதற்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள்” என கூறியுள்ளார்.