உலகம் முழுவதும் வெப்பமயமாதல், நிலத்தடி நீர் இருப்பு குறைதல் உள்ளிட்ட பல காரணங்களால் குடி தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்காவின் கேப்டவுன் சமீபத்தில் தண்ணீர் இல்லா ஜீரோ மண்டலமாக ஆன நிலையில் இந்தியாவின் பல நகரங்களிலும் இந்த பிரச்சினை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் குடிக்க நீர் நிலைகளில் தண்ணீர் கிடைக்காததால் யானை ஒன்று மக்கள் புழங்கும் அடிப்பம்பை அடித்து தண்ணீர் குடிக்க முயல்கிறது. இதை பகிர்ந்துள்ள ஜல்சக்தி அமைச்சகம் “ஒரு சொட்டு நீர் எவ்வளவு முக்கியம் என்பதை யானை அறிந்திருக்கிறது, மனிதர்கள் ஏன் இதனைப் புரிந்து தண்ணீரை சேமிக்கக்கூடாது? தண்ணீரை வீணாக செலவு செய்வதை தவிர்க்கக்கூடாது?” என கேள்வி எழுப்பியுள்ளது.