ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு!

வியாழன், 13 அக்டோபர் 2022 (10:50 IST)
ஹிஜாப் வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் இரண்டு நீதிபதிகளும் இருவேறு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வரக்கூடாது என உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த உத்தரவை கர்நாடக மாநில ஐகோர்ட்டு உறுதி செய்தது
 
இந்த நிலையில் இது குறித்து மேல்முறையீடு சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கினார்கள்
 
மேல்முறையீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகிய இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என  ஹேமந்த் குப்தாவும்  தீர்ப்பளித்துள்ள நிலையில் அந்த தடை செல்லாது என சுதான்சு துலியா தீர்ப்பளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்