தட்டம்மையால் 2 குழந்தைகள் உயிரிழப்பு: பள்ளிகள் மூடப்பட்டதால் பரபரப்பு..!

Siva

செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (09:17 IST)
மத்திய பிரதேசம் மாநிலத்தில் தட்டம்மை நோய் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் உயிர் இழந்ததை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் என்ற பகுதியில் தட்டம்மை மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை 17 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது. 
 
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதிக்கு மருத்துவர் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தட்டம்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் தட்டம்மை பாதிக்கப்பட்ட எட்டு கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மேலும் உலக சுகாதார அமைப்பின் குழுவும் நோய் பாதித்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்