டிவிட்டருக்கு இனி இருண்ட காலம் தான் - புலம்பும் பராக் அகர்வால்!

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (13:01 IST)
அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என டிவிட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். 

 
உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் முக்கியமான இடத்தில் இருப்பது ட்விட்டர். சமீப காலமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் முயன்று வருவதாக தகவல்கள் வெளியானது.
 
முன்னதாக ட்விட்டரிக் எலான் மஸ்க் 9.2 சதவீதம் பங்குகளை வாங்கியிருந்த நிலையில் அவரை ட்விட்டர் நிர்வாக குழுவில் இணைய ட்விட்டர் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை தான் முழுமையாக வாங்கி கொள்ள விரும்புவதாக கூறிய எலான் மஸ்க் பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்கா டாலர் என டீல் பேசியுள்ளார்.
 
இந்த பேரத்திற்கு ட்விட்டர் நிர்வாக குழு ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனால் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான பரிவரத்தனை எப்போது நடைபெறும் போன்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 
 
இந்நிலையில் இது குறித்து டிவிட்டர் நிறுவனத்தை வழி நடத்தி வரும் இந்தியரான பராக் அகர்வால் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இனி இருண்ட காலம் தான். அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என டிவிட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். டிவிட்டர் நிறுவனம் விற்கபட்டால் இது தான் ஏற்படும் என அவர் தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்