திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ.1300 கோடி எஸ் வங்கியில் சிக்கியதா? பரபரப்பு தகவல்

வெள்ளி, 6 மார்ச் 2020 (17:47 IST)
திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ.1300 கோடி எஸ் வங்கியில் சிக்கியதா?
தனியார் வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்க் சமீபத்தில் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியது என்பதும் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூபாய் 50 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்ற செய்தியும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கியை மீட்டு கொண்டுவர தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும், இப்போதைக்கு எஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
சற்று முன்னர் பேட்டி அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் எஸ் வங்கியின்  வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் எஸ் பேங்க் குறித்த பரபரப்புத் நாடு முழுவதும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் இன்று ஒரே நாளில் எஸ் வங்கியின் பங்குகள் 50% வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ரூ.1300 கோடி ரூபாய் நூலிலழையில் எஸ் வங்கியில் இருந்து தப்பி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எஸ் பேங்க் சமீபத்தில் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பது அதை அறிந்த திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே எஸ் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.1300 கோடியை திரும்பப் பெற்று வேறு வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. இதனை அடுத்து திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ.1300 கோடி ரூபாய் தப்பியதாக தேவஸ்தான நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்