எல்லையில் ஊடுருவ முயற்சி.! 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.! பாதுகாப்பு படை அதிரடி..!!

Senthil Velan

ஞாயிறு, 23 ஜூன் 2024 (14:49 IST)
ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். 
 
தீவிரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி இந்தியாவில் பல்வேறு நாச வேலைகள் ஈடுபட முயற்சித்து வருகின்றனர். அவர்களின் முயற்சியை எல்லையில் இருக்கும் நமது பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் வடக்கு காஷ்மீரின் உரி செக்டரில் உள்ள கோஹல்லான் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில் சந்தேகத்திற்கிடமான இருவர் நடமாடுவதை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

ALSO READ: குரூப்-2 பணிகளுக்கு புதிதாக வயது வரம்பு திணிக்கப்பட்டது ஏன்.? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி..!
 
இந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்