அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர பகதராக இருந்தவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயியான கிருஷ்ணா ராஜு. ட்ரம்ப்புக்கு ஆறடி சிலை அமைத்து, தினமும் பூஜித்து வந்தார். இந்நிலையில் டர்ம்ப்புக்கு கொரோனா தொற்று உள்ளது என அறிவிக்கப்பட்டதில் இருந்து கிருஷ்ணா மன வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் நான்கைந்து நாட்களாக உணவு எதுவும் உட்கொள்ளாமல் டர்ம்புக்காக வேண்டிக்கொண்டு இருந்துள்ளார்.