பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும், வெளிநாட்டு பிரதமர்கள் இந்தியா வரும்போதும் நரேந்திர மோடி கைகுலுக்கி, கட்டிபிடித்து வரவேற்பது வழக்கம். பிரதமர் வரவேற்கும் விதம் கேலிக்கு ஆளாகி சமூக வலைதளங்களில் வலம் வருவது வழக்கம்.
இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில், காங்கிரசின் இந்த அருவருக்கதக்க செயல் அதன் பக்குவமின்மையை காட்டுகிறது. விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கும் வேளையில் மோடியின் கட்டிப்பிடி வரவேற்பை அருவருக்கதக்க வகையில் விமர்சித்துள்ளது காங்கிரசின் நிலைத் தன்மை வலுவிழந்து உள்ளது என்பதை காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளனர்.