தண்டவாளத்தில் குறுக்கே நின்ற மாடு… 35 கி.மீ பின்னோக்கி சென்ற ரயில்!

வியாழன், 18 மார்ச் 2021 (11:29 IST)
டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்ற ரயில் பின்னோக்கி சென்றதால் பயணிகள் பதற்றத்துக்கு ஆளானார்கள்.

புர்னகிரி சதாப்தி விரைவு ரயில் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் தனக்பூருக்கு சென்று கொண்டிருந்தது. இடையில் தண்டவாளத்தில் ஒரு மாடு நின்று கொண்டிருந்ததால் அதன் மேல் ரயில் மோதாமல் இருக்க ரயிலை இயக்குபவர் நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் 35 கி மீ பின்னோக்கி செல்ல தொடங்கியுள்ளது.

இதனால் பயணிகள் பதற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். பின்னர் கட்டிமா ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்