திண்டுக்கல் மருத்துவமனையில் தீ! சிறுவன் உட்பட 7 பேர் பரிதாப பலி!

Prasanth Karthick

வெள்ளி, 13 டிசம்பர் 2024 (09:10 IST)

திண்டுக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிறுவன் உட்பட 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

திண்டுக்கல் - திருச்சி சாலையில் காந்திஜி நகரில் தனியார் எலும்புமுறிவு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் 50க்கும் மேற்பட்ட மக்கள் அம்மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அப்போது தரைத்தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

 

மருத்துவமனை பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாத நிலையில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குள் மருத்துவமனையில் சிக்கிய நோயாளிகள், அவர்களது உறவினர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்றனர். மேலும் திண்டுக்கல் முழுவதிலும் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் கொண்டு வரப்பட்டு மீட்கப்பட்ட மக்கள் பிற மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 

ALSO READ: முகத்தை பொலிவாக்காத Fairness Cream! அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!
 

இந்த தீ விபத்தின்போது சிறுவன் உட்பட 7 பேர் லிஃப்டில் சிக்கிய நிலையில் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானார்கள். தீயணைப்பு துறையினர் லிஃப்ட்டை உடைத்து அவர்களது உடல்களை மீட்டனர். சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் ஆட்சியர், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் சென்று பார்வையிட்டதுடன், சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்