காஷ்மீர் முதல்வருக்கு வந்த சோகம்

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (07:51 IST)
காஷ்மீரில் முதல்வர் முப்தி முகமது சயீத் காலமானதை தொடர்ந்து, அவரது மகள் மெகபூபா முப்தி சமீபத்தில் முதல்வராக பொறுப்பேற்றார்.


 
அவர் முதல் முறையாக, ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் அரசு சார்பில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டார். பின்னர், அவர் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை ஏற்றினார், சிறுது உயரம் சென்ற தேசிய கொடி, எதிர்பாராதவிதமாக, கீழே விழுந்தது. இதைப்பார்த்து ஓடிவந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக தேசியக் கொடியை கையில் ஏந்திக் கொண்டனர்.

இதனால் முதல்வர் மெகபூபா கடும் தர்மசங்கடத்துக்கு ஆளானார். பின்னர் காவல்துறையினர் தேசியக் கொடியை பிடித்து கொண்டிருக்க,  முதல்வர் அதற்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். கொடி கீழே விழுந்தது தொடர்பாக விசாரிக்க காஷ்மீர் மாநில டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்